2025 வரவு செலவுத் திட்டம் : ஜனாதிபதியின் விசேட முன்மொழிவுகள்
இலங்கையின் 79ஆவது வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கிறார்.
குறித்த 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பின்வரும் விடயங்கள் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ளன.
அதன்படி, அஸ்வெசும மற்றும் ஏனைய நலன்புரி சேவைகளுக்காக ஜூலை மாதம் முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறுமையை போக்குவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுதல்.
புதிய தேசிய தீர்வை வரி முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க திட்டம்.
புதிய சுங்க சட்டத்தை முன்வைக்க நடவடிக்கை.
வருமானத்தை அடிப்படையாக கொண்டு அரச காணிகள் முதலீடுகளுக்காக குத்தகைக்கு வழங்கப்படும்.
அரச – தனியார் கூட்டாண்மைக்கு புதிய சட்டம்.
தேசிய தர முகாமைத்துவ கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒடுக்கீடு.
கொழும்பு துறைமுகத்தின் வடக்கு – மேற்கு முனைய அபிவிருத்திகளுக்காக ஒரு மாதத்துக்குள் யோசைனைகள் கோரப்படும்.
பல்நோக்கு பொருள் விநியோக மத்திய நிலையமாக வெயாங்கொடையில் உள்ளக கொள்கலன் முனையம் நிர்மானிக்கப்படும்.
துறைமுக அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கொழும்பு துறைமுகம் - பண்டாரநாயக்க சர்வசே விமான நிலையத்தில் உயர்தர ஸ்கேன் கட்டமைப்பை உருவாக்க 1000 மில்லியன் ரூபா ஒருக்கீடு.
இலத்திரனியல் அடையாள அட்டை விரைவில் அறிமுகம்.
கட்டங்கட்டமாக நாணயத்தாள் பாவனையை குறைக்க திட்டம்.
தொடர்பாடல் தொழில் நுட்பத்தினூடான வருடாந்த ஏற்றுமதி வருமானத்தை 5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்படும்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சுற்றுலாதுறை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சுற்றுலாதுறை சார் இடங்களுக்கு புதிய டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஜப்பான் நிதியுதவியுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய காப்புறுதி இரண்டரை இலட்சம் ரூபாவால் குறைப்பு.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் சகல அதிசொகுசு வாகனங்களும் குத்தகைக்கு விடப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனம் இறக்குமதி செய்வதல் மற்றும் வாகன இறக்குமதிக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு நீதி ஒதுக்கீடு இல்லை.
திரிபோசா வேலைத்திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மகளிர் , சிறுவர் துஷ்பிரயோகம், மகளிர் திறன் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்காக 120 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மகளிர் அபிவிருத்திக்கான கிளைகளை மேம்படுத்த 720 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்காக மனிதளவளம், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.
சுகாதார சேவைக்காக 604 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.
லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சர்வதேச தரம் கொண்ட சிகிச்சை நிலையமொன்றை அமைக்க 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
பாடசாலை உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபா வரையில் நிதி ஒதுக்கீடு.
பல்கலைக்கழக கட்டமைப்பு அபிவிருத்திக்காக 135 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
முன்பள்ளி மாணவர்களுக்காக காலை உணவுக்கான வேலைத்திட்டத்துக்கான ஒதுக்கீடு 60 ரூபாவிலிருந்து 100 ரூபாவாக அதிகரிப்பு – 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பாடசாலை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து புதிய நிலையை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்துக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான மாணவர் உதவி தொகை 750 ரூபாவிலிருந்து 1500 ரூபாவாக அதிகரிப்பு- 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
விளையாட்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த போசணை கொடுப்பனவு 5000 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பு.
தொழில் பயிற்சி கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 4000 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரிப்பு – 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல உதவி தொகையை 5000 ரூபாவிலிருந்து 7500 ரூபாவாக அதிகரிப்பு – பல்கலை. மாணவர்களின் மாணவர் உதவி தொகை 4000 ரூபாவிலிருந்து 6500 ரூபாவாக அதிகரிக்கப்படும். இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் அதி சித்தியை பெறும் மாணவர்கள் வெளிநாட்டு படிப்பு மற்றும் வினைத்திறன் விருத்தி வேலைத்திட்டத்துக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மேல், வடமத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களில் விசேட விளையாட்டு துறை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தொழில்நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு- ஏனைய பகுதிகளிலுள்ள நூலகங்களுக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
திருத்தப்பட்ட புதிய மின்சார சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்.
திருகோணமலையிலுள்ள 66 எண்ணெய் தாங்கிகளை சர்வதேச நிறுனங்களுடன் ஒன்றிணைந்து அபிவிருத்தி செய்ய திட்டம்.
விவசாயிகளுக்கான உர மானியத்துக்கான ஒதுக்கீடு 35000 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.
2024 / 2025 ஆம் ஆண்டு பெரும்போக நெல்லை கொள்வனவு செய்ய 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சோயா, கௌப்பி, பாசிப்பயறு, உளுந்து, மிளகாய், உருழைக்கிழங்கு போன்ற தானிய விளைச்சல்களுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
பாவனையின்றி இருக்கும் காணிகளின் மீள் அபிவிருத்திக்கான ஆரம்பகட்டச் செயற்பாடுகளுக்காக 250 மில்லியன் ருபா ஒதுக்கீடு.
இராஜாங்கனை, கல்லோயா, மின்னேரியா, உருவெல நீர்தேக்கங்களின் மீள் அபிவிருத்திக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
தென்னை பயிர்செய்கை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கறுவா உள்ளிட்ட ஏனைய ஏற்றுமதி பயிர்களுக்கான சந்தை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான ஒதுக்கீடு 232.5 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.
சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 7500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரிப்பு.
முதியவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை 3000 ரூபாவிலிருந்து 5000 ரூபா வரையில் அதிகரிப்பு.
ஆதரவின்றி இருக்கும் சிறுவர்களுக்கு 5000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்க தீர்மானம். 2000 ரூபாவை அவர்களின் வங்கி கணக்கில் வைப்பிலிடவும் தீர்மானம் - இந்த வேலைத்திட்டத்துக்காக் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
ஆதரவின்றி இருக்கும் சிறுவர்கள் திருமணம் செய்யும்போது அவர்களுக்கான வீட்டை நிர்மாணித்துக்கொள்வதற்காக ஒரு மில்லியன் ரூபா வழங்க திட்டம் - இதற்காக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் விலங்குகளினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் உபாதைகளுக்காக வழங்கப்படும் நிவாரண தொகை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பு.
புத்தாண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்தினூடாக விசேட உணவு பொதியை வழங்குவதற்காக 1000 மில்லியன் ரூபா ஒருக்கீடு.
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பிலுள்ள ஒரு மில்லியன் ரூபாவுக்கு,சந்தையிலுள்ள வட்டி வீதங்களை விட 3 சதவீத வட்டி வீதம் வழங்கத் திட்டம் ஜூலை முதல் நடைமுறைக்கு வரும்.
கொழும்பு நகருக்கு உள்நுழையும் பிரதான வீதிகளினூடாக 100 சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தத் திட்டம். ( கொட்டாவ - கொழும்பு, மொறட்டுவ – கொழும்பு, வத்தளை – கொழும்பு, கடவத்த – கொழும்பு) இதற்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
இலங்கை போக்குவரத்துச் சபையினூடாக 200 பேருந்களை சேவையில் ஈடுபடுத்தத் திட்டம்.
தொடருந்து சேவை வினைத்திறனை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
புதிய தொடருந்து நிலையங்களை உருவாக்கும் வேலைத்திட்டத்துக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
தம்புத்தேகம தொடருந்து நிலையத்தை புனரமைப்பு செய்வதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் கடனை மீள் செலுத்துவதற்கான இடைக்கால செயற்பாடுகளுக்காக 20,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கிராமிய வீதிகளின் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
கிராமிய பாலங்களை அபிவிருத்தி செய்ய 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
வடக்கு மாகாணங்களிலுள்ள கிராமிய வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
மாவட்ட மட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக மேலதிகமாக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
இந்திய நிதியுதவியுடன் கிழக்கு மாகாணத்தில் பரந்துப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்த யோசனை.
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்தாரத்தை மேம்படுத்துவதற்காக 7583 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
ஆகியன இன்று ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 14 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்