கோண்டாவிலில் திருடப்பட்ட 20 இலட்சம் பெறுமதியான கட்டட பொருட்கள்! புலனாய்வு பிரிவினர் கண்டுபிடிப்பு
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kiruththikan
யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் திருடப்பட்டிருந்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டட பொருட்களை கோப்பாய் காவல்துறை புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.
கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் கடந்தவாரம் வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நில மாபிள்கள், கழிவறைக்கு பயன்படுத்தும் மாபிள் உபகரணங்கள், மின் மோட்டார் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளடங்களாக பல பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
குறித்த பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, கோப்பாய் காவல்துறையினர் சந்தேகநபர்களை கைது செய்துள்ளதோடு, திருடப்பட்டப் பொருட்களையும் மீட்டுள்ளதாக தெரிவித்தனர்.

