ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்தல் விடுத்துள்ளது.
அதன்படி, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
அத்துடன் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ஆசிரியர்கள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன (Madhura Senevirathna) தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தம்
எனினும் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஏற்றத்தாழ்வு நாடு முழுவதும் ஆசிரியர் பங்கீட்டை கணிசமாக பாதித்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஏற்ப நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர்களை மறுபகிர்வு செய்ய அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளும் என மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 7 பாடங்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

