அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Army Sri Lanka Police Anuradhapura
By Sathangani Jul 16, 2025 05:25 AM GMT
Report

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த கோரிக்கையை அனுராதபுரம் பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.

குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய சந்தேகநபரின் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்கு அனுமதி வேண்டும் என சந்தேகநபரால் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த அனுராதபுரம் காவல் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உப காவல்துறை பரிசோதகர் ஏ.சி. தயானந்த, பாதிக்கப்பட்ட வைத்தியவரை அவமதித்து அவரை அவமானப்படுத்தும் நோக்கில் பல்வேறு பொய்யான தகவல்களை வெளியிட சந்தேகநபர் வேண்டுமென்றே நீதிமன்றத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் சிக்கப் போகும் பலர் : அரசின் அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - விரைவில் சிக்கப் போகும் பலர் : அரசின் அதிரடி அறிவிப்பு

வைத்தியரின் தொலைபேசி

சந்தேகநபர் இதுபோன்ற பொய்யான தகவல்களை வெளியிட்டு ஊடகங்கள் மூலம் அதைப் பற்றி விளம்பரப்படுத்தி பாதிக்கப்பட்ட வைத்தியரை அவமானப்படுத்த வேண்டுமென்றே முயற்சிப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சந்தேகநபர் முன்பு திறந்த நீதிமன்றத்தில் முற்றிலும் பொய்யான தகவல்களை வெளியிட்டதாக உப காவல்துறை பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு | A Pura Hospital Doctor Abuse Case Court Order

தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து, சந்தேக நபர் இதுபோன்ற தீங்கிழைக்கும் பொய்யான தகவல்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்றும் உப காவல்துறை பரிசோதகர் நீதிமன்றத்தை கோரினார்.

சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாயால் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட வைத்தியரின் பெறுமதிமிக்க ஸ்மார்ட்போனை அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி, பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதான நீதவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேங்காய் ஏற்றுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

தேங்காய் ஏற்றுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்

இந்த குற்றத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ சிப்பாயை ஜூலை 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ சிப்பாயை டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி, அந்த வைத்திய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதவானால் இதற்கு முன்னர் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அனுராதபுரம் வைத்தியர் வன்கொடுமை விவகாரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு | A Pura Hospital Doctor Abuse Case Court Order

இது தொடர்பாக நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்த காவல்துறையினர் இந்த குற்றம் குறித்து தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் கூறினர்.

கல்னேவா புதிய நகரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கே.பி. மதுரங்க ரத்நாயக்க, முன்னர் அடையாள அணிவகுப்புக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரால் அவரை அடையாளம் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.


செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது: வெளியான அறிக்கை

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது: வெளியான அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
23ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010