ஈரான் சரணடைவதை அறிவிக்கக்கூட யாரும் அங்கு இருக்கமாட்டார்கள்! ட்ரம்ப் சூளுரை
ஈரான்மீது யுத்தத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு அறை கூவல்களை விடுத்துள்ளார்.
அதாவது ஈரான் நிபந்தனையில்லாமல் சரணடையவேண்டும் என்பது ஒன்று. மற்றையது ஈரானின் புதிய தலைவரை தானே தெரிவு செய்யவேண்டும் என்பது மற்றொன்று.
அத்துடன் ஈரானுடன் சமாதானம் பேசுவதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் ஈரானில் இராணுவமோ தலைவர்களோ இல்லாத நிலையில்தான் ஈரான் யுத்தம் முடிவிற்கு வருமென்றும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்திருந்தார்.
ஈரானின் இராணுவம் முற்றாக அழிக்கப்பட்டு அடுத்த லைவர்கள் அனைவரும் அழிக்கப்படும் வரை அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் தொடரும் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் சரணடைகின்றோம் என்று தெரிவிப்பதற்கு கூட ஈரானில் தலைவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள் எனவும் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில் ஈரான் யுத்தம் தொடர்பில் அமெரிக்கா எதைச் சாதிக்கப்போகிறது உலகிற்கு எதனை காண்பிக்கப்போகிறது என்பதை விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம்…...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |