செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது: வெளியான அறிக்கை

Sri Lankan Tamils Tamils chemmani mass graves jaffna
By Shalini Balachandran Jul 16, 2025 01:24 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழியில் நீல நிறப் புத்தகப்பை (யுனிசெவ் நிறுவனத்தின் புத்தகப்பை), சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி நான்கு மற்றும் ஐந்து வயதுடைய சிறுமியினுடையது என்று சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

செம்மணிப் புதைகுழியில் இருந்து நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு (நேற்று) முன்னர் மன்றில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

யாழில் 80 லட்சம் பணமோசடி: தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த இளைஞர்

யாழில் 80 லட்சம் பணமோசடி: தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த இளைஞர்

நீதிமன்றத்தில் விசாரணை

குறித்த உத்தரவை யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கடந்த பத்தாம் திகதி பிறப்பித்திருந்தார்.

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது: வெளியான அறிக்கை | Chemmani Skeleton With Bag Confirmed As Girl S

இந்தநிலையில் 14 ஆம் திகதி செம்மணிப் புதைகுழி தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அந்த என்புத் தொகுதி தொடர்பான அறிக்கை மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

விளையாடும் பொம்மை 

நீல நிறப் புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட எஸ் - 25 என அடையாளமிடப்பட்ட என்புத் தொகுதி சிறுமியின் என்புத் தொகுதி எனவும், உத்தேசமாக நான்கு மற்றும் ஐந்து வயதுடையதாக இருக்கும் எனவும் சட்ட மருத்துவ அதிகாரி மன்றில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

செம்மணியில் புத்தகப்பையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு சிறுமியினுடையது: வெளியான அறிக்கை | Chemmani Skeleton With Bag Confirmed As Girl S

அத்தோடு, எஸ் - 48, எஸ் - 56 என அடையாளமிடப்பட்ட சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள், புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட சிறுமியினுடைய என்புத் தொகுதியோடு உடைகள் மற்றும் என்பியல் சம்பந்தமாக ஒருமித்த தன்மைகள் இருப்பதாகவும் மன்றுக்கு சட்ட மருத்துவ அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புத்தகப்பையோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டது போன்ற என்பு ஆய்வை சிறுவர்களினுடையது என நம்பப்படும் குறித்த இரண்டு என்புத் தொகுதிகள் மீதும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மன்றால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் வேலைவாய்ப்பு: இலங்கையர்களுக்கு வெளியாகும் நற்செய்தி

ஜப்பானில் வேலைவாய்ப்பு: இலங்கையர்களுக்கு வெளியாகும் நற்செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010