கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மீண்டும் பதற்றம்
கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள் மற்றும் கொழும்பு மாநகரசபை அதிகாரிகளுக்கு இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வளாகத்தில் பிக்குகளால் அமைக்கப்பட்டிருந்த கொடிகள் மற்றும் பதாகைகளை கொழும்பு மாநகரசபை அதிகாரிகள் அகற்றுவதற்கு முற்பட்டதை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொடிகள்,பதாகைகளை அகற்ற முற்பட்டபோது பதற்றம்
அங்கிருந்த பதாகைகளை பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்த போதிலும், அந்த இடத்தில் இருந்த பிக்குகளும் பொதுமக்களும் அவற்றை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இதன்போது சத்யாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளிடம் சென்ற விஹாரமகாதேவி பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள், அங்குள்ள கொடிகள் மற்றும் பதாகைகளை அகற்றுமாறு அல்லது அதற்குரிய கட்டணத்தைச் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு செய்யத் தவறினால், குறித்த கொடிகள் மற்றும் பதாகைகளை அதிகாரிகள் அகற்ற வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் சத்யாகிரகத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளுக்கு அறிவித்துள்ளனர்.
பதாகைகளை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை
இதற்குச் சத்யாகிரக இடத்தில் இருந்த பிக்குகள் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே இந்தத் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அங்கிருந்த பதாகைகளை பூங்காவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுத்த போதிலும், அந்த இடத்தில் இருந்த பிக்குகளும் பொதுமக்களும் அவற்றை மீண்டும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
பூங்கா வளாகத்தில் பதாகைகளை வைப்பதற்கு மாநகரசபை அல்லது உரிய அதிகார அமைப்புகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பின், அதற்கான கட்டண விகிதங்களைத் தெரிவித்தால் அதை உடனடியாகச் செலுத்தத் தயார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |