மறைவுக்கு முன் ஈழத்தமிழர்களுக்காக பாடிய தேனிசைத் தென்றல் தேவா
இவ்வுலகை விட்டு மறைந்த தேனிசைத் தென்றல் தேவா இறுதியாக ஈழத்து திரைப்படமான போராட்டம் திரைப்படத்தில் “சோறுதான் முக்கியம்” என்ற பாடலை பாடியிருந்தார்.
இது குறித்து போராட்டம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் பூவன் மதீசன் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
போராட்டம் திரைப்படத்தின் பாடலுக்காக தேனிசைத் தென்றல் தேவா நீண்ட கால பயிற்சி எடுத்து பாடியது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.
நீண்ட காலத்திற்கு பிறகு தனக்கு இவ்வாறானதொரு பாடல் அமைந்திருக்கு என்று அவர் மிகவும் சந்தோசப்பட்டார். அதாவது பழைய கானா பாடல் போன்று இந்த மாதிரியான வரிகளுடன் அமைந்திருந்ததாகவும் தேவா சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்தில் இருப்பவர்களுக்காக ஒரு பாடல் பாடியது மிகச் சந்தோசமாக இருப்பதாகவும் தேனிசை தென்றல் தெரிவித்தார்.” என குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தப் பாடலுக்கு நல்ல வரவற்பு கிடைத்த நிலையில் மீண்டும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற நினைத்த தருணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தமை மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது என பூவன் மதீசன் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |