வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது
Sri Lanka Police
Bandaranaike International Airport
Dubai
By Jaso
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிகரெட் கையிருப்பின் பெறுமதி 3,840,000 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 38 வயதான வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
டுபாயில் இருந்து வருகை தந்த நிலையில்
இந்த வர்த்தகர் நேற்று (31) இரவு 10:00 மணியளவில் டுபாயில்(dubai) இருந்து எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் EK-648 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

38,400 சிகரெட்டுகள் அடங்கிய 192 சிகரெட் பொதிகள் அவரது பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி