தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம்

CID - Sri Lanka Police Sri Lanka Police Investigation Rajapaksa Family
By Dharu Jul 16, 2026 06:20 AM GMT
Report

தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் (Dinesh Schaffter) கொலை வழக்கை மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்ட நபர் குறித்த கருத்தை இலங்கை காவல்துறையை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி இந்த வழக்கை பிரதி காவல்துறைமா அதிபர் பிரசாத் ரணசிங்க மூடிமறைப்பதற்கு முன்னிலையில் இருந்து செயற்பட்டவர் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவர் ராஜபக்ச கூட்டத்தின் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்றும், இந்தச் சம்பவத்தை மூடிமறைத்தது, அவருக்குப் பின்னால் இருந்தவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே என்றும் கூறப்படுகிறது.

இந்திய - இலங்கை ஆடைத் துறை வர்த்தகம் குறித்து விசேட பேச்சுவார்த்தை

இந்திய - இலங்கை ஆடைத் துறை வர்த்தகம் குறித்து விசேட பேச்சுவார்த்தை

தினேஷ் ஷாப்டரின் கொலை

இந்நிலையில் தற்போது தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் வர்த்தகர் கொலை வழக்கை மூடிமறைக்க திட்டமிட்ட நபர்! நாட்டை விட்டு தப்பியோட பாரிய திட்டம் | Businessman Schaffter Murder Case Covered Up

இதற்கமைய உடனடியாக பிரசாத் ரணசிங்கவை கைது செய்ய வேண்டும் என இலங்கை காவல்துறையை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அவருக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்த அவர், பிரசாத் ரணசிங்கவின் மனைவி கொழும்பில் விசா (Agencies) அலுவலகம் ஒன்றை நடத்தி வருகிறார் என்றும், இப்போது இவர்கள் இருவரும் நாட்டை விட்டு தப்பிச் செல்லத் தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

பிரசாத் ரணசிங்க நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கு முன் உடனடியாக அவருக்குப் பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இடியுடன் கூடிய கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கைத தடுத்த ராஜபக்சர்கள் 

“அன்று பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவால் (Bribery Commission) கைது செய்யச் சென்றபோது, அங்கு என்ன நடந்தது. இலஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் விளக்கமறியலில் வைப்பதற்கு முன், அதனைத் தடுத்தார்கள் ராஜபக்ச கூட்டத்தினர். இந்த பிரசாத் ரணசிங்க மற்றும் SSP பிரசாந்த ஆகிய இருவரும் இணைந்தே இந்த விசாரணையை மூடிமறைத்தனர்.

அன்று ஏதேனும் ஒரு வழியில் இதனை வெளிக்கொண்டு வர முடிந்திருந்தால், கொலைகாரர்கள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆளுநர்களின் பதவி விலகல் - பிரதமரும் விலகுவாரா...! சீலரத்ன தேரர் கேள்வி

ஆளுநர்களின் பதவி விலகல் - பிரதமரும் விலகுவாரா...! சீலரத்ன தேரர் கேள்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026