குறைவடையவுள்ள மருந்து பொருட்களின் விலை - அமைச்சரவை அனுமதி
Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
60 மருந்து பொருட்களின் ஆகக்குறைந்த சில்லறை விலையை, 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறையாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
3 மாதங்களுக்கு ஒருமுறை திருத்தம்
அதேநேரம், 3 மாதங்களுக்கு ஒருமுறை மருந்துகளின் விலையில் திருத்தம், மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்