குழிக்குள் புதைந்த மகிழுந்து - அனர்த்தத்தில் சிக்கிய தாயும் மகளும்!
கலிபோர்னியா மாகாணத்தை தாக்கிய புயலுக்கு நடுவே, சாலையில் பயணித்த தாயாரும் மகளும் திடீரென்று உருவான குழிக்குள் புதைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் கலிபோர்னியாவினின் Chatsworth பகுதியில் ஏற்பட்டுள்ளது.
குறித்த அனர்த்ததை அடுத்து ,வேகமாக செயல்பட்ட மீட்புக்குழுவினரால் அவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
திடீர் பள்ளத்தை
இது தொடர்பாக மீட்புக்குழுவினர் கருத்து தெரிவிக்கையில் சாலையில் திடீரென்று 15 அடி பள்ளம் உருவாகி, அதில் இரண்டு வாகனங்கள் சிக்கியுள்ளது.
தாயாரும் மகளும் பயணித்த மகிழுந்து அந்த திடீர் பள்ளத்தை கவனிக்காததால், அதனுள் சிக்கியுள்ளது. அதன் பின் வந்த ட்ராக் வாகனம் ஒன்றும் அதனுள் சிக்கியுள்ளது குறித்த சம்பவத்தில் ட்ராக் வாகனத்தில் இருந்த இருவரும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சேரும் முன்னர் பள்ளத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
ஆனால் தாயாரும் மகளும், மகிழுந்து மீது டிரக் சரிந்ததால், சிக்கிக்கொண்டு, மீள முடியாமல் தவித்துள்ளனர்.
முயற்சிகள் பலனளிக்காமல் போயுள்ளது
இதனையடுத்து சுமார் 50 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் இணைந்து, அந்த தாயாரையும் மகளையும் மீட்க போராடினர். முதற்கட்டமாக அவர்கள் முன்னெடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போயுள்ளது.
அதுமட்டுமின்றி, பள்ளத்தில் வாகனங்கள் மேலும் புதைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் ஏணியுடன் குழிக்குள் இறங்கி, ஆபத்தான நிலையில் இருந்த வாகனத்தில் இருந்து தாயாரையும் மகளையும் காப்பாற்றியுள்ளனர்.
இருவரும் லேசான காயங்களுடன் காணப்பட்டதால், அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இளவரசர் ஹரி குடும்பம் வெளியேறியுள்ளது
அத்துடன், சாலையில் வழிந்தோடிய வெள்ளம் அந்த பள்ளத்தை நிரப்பும் வகையில் அமைந்தது. இதனால் அந்த இரு வாகனங்களும் மேலும் புதைந்துபோகும் நிலையில் காணப்படுகின்றது.'' என தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கலிபோர்னியா மாகாணத்தில் புயலில் சிக்கி 14 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி குடும்பம் உட்பட ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புகளில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
two cars inside a giant sinkhole that opened up on Tuesday during the relentless storms ravaging #California. According to local media, the passengers were rescued and hospitalized with minor injuries.#Californiastorm #californiaflood #californiarain #Californiaflooding pic.twitter.com/mzIo95yJn8
— Sujit Gupta (@sujitnewslive) January 11, 2023


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
