கல்வி அமைச்சருக்கு எதிரான பிரசாரங்கள்! கஜேந்திரகுமார் கண்டனம்
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக தற்போது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பிரசாரங்களை தாம் ஏற்றுக்கொள்ளபோவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இவை முற்றிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அவதூறு பிரசாரங்கள் என்றும் கூறியுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தீர்க்கமான கொள்கை முரண்
“பிரதமர் என்ற ரீதியிலும் அவரது கட்சியின் ஒரு முக்கியஸ்தர் என்ற வகையிலும் ஹரிணி அமரசூரியவுடன் எமது அமைப்புக்கும் எனக்கும் மிக முக்கியமான தீர்க்கமான கொள்கை முரண்கள் காணப்படுகின்றன.

இருந்த போதும் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளவேமுடியாவை.
இவ்வாறான அவதூறு பிரசாரங்களை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |