இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எங்கே..! ஈரான் ஊடகத்தின் தகவலால் பரபரப்பு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இருப்பிடம் குறித்து ஈரானிய ஊடகங்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் நெதன்யாகு பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஈரானிய இராணுவம் கிளப்பியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயமடைந்திருக்கலாம் என்று ஈரானிய ஊடகங்கள் (குறிப்பாக தஸ்னிம் செய்தி நிறுவனம்) செய்தி வெளியிட்டுள்ளன.
பொது நிகழ்ச்சிகளில் தோன்றாத நெதன்யாகு
நெதன்யாகு சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் தோன்றாதது, அவரது இல்லத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் திட்டமிடப்பட்டிருந்த பல ராஜதந்திர சந்திப்புகள் ஒத்திவைக்கப்பட்டது ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த யூகங்கள் கிளம்பியுள்ளன.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தூதர் ஒருவருடன் நடக்கவிருந்த முக்கிய சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இஸ்ரேல் தரப்பில் ஏதோ ஒரு அசாதாரண சூழல் நிலவுவதையே காட்டுவதாக ஈரான் தரப்பு வாதிடுகிறது.
உச்சக்கட்டத்தை எட்டியுள்ள போர் பதற்றம்
இந்த வதந்திகள் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான விளக்கங்கள் இதுவரை வெளியாகவில்லை, இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நெதன்யாகு குறித்த இந்தத் தகவல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |