அதிகரிக்கப்பட்டது எரிபொருளின் விலை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இன்று (01) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைத் திருத்தம் ஒன்றை அறிவித்துள்ளது.
இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலைப் விபரங்களின்படி,
புதிய விலை விபரம்
லங்கா டீசல் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 5 இனால் அதிகரிக்கப்பட்டு(பழைய விலை ரூபா 392), அதன் புதிய விலை ரூபா 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை ரூபா 15 இனால் அதிகரிக்கப்பட்டு(பழைய விலை ரூபா 528), அதன் புதிய விலை ரூபா 543 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டு(பழைய விலை ரூபா 414), அதன் புதிய விலை ரூபா 424 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை ரூபா 15 இனால் அதிகரிக்கப்பட்டு(பழைய விலை ரூபா 475), அதன் புதிய விலை ரூபா 490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத நிலையில் அதன் விலை ரூபா 285 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |