அமெரிக்காவுடனான மறைமுகப் பேச்சுவார்த்தை: ஈரானுக்கு அராக்சி விளக்கம்
அமெரிக்காவுடன் தங்களது நாடு மத்தியஸ்தர்கள் மூலம் மேற்கொண்டு வரும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளின் அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விளக்கம் வழங்கியுள்ளார்.
இதன்படி ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் மற்றும் அமைச்சரவைக்கு அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவுடனான தற்போதைய தூதரகச் செயல்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகளின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அவர் விளக்கம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜே.டி. வேன்ஸ் தரப்பு
அமெரிக்கத் துணைத் தலைவர் ஜே.டி. வேன்ஸ் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தை ஈரானின் உயர்மட்டக் குழுவினர் ஆய்வு செய்துள்ளதாகவும் மேலும் விவரிக்கப்படுகிறது.

இதன்படி இருதரப்புப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகை செய்யும் அமெரிக்காவின் இந்த அணுகுமுறை மாற்றம் ஒரு நேர்மறையான நகர்வு என்றும் ஈரானிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |