வரலாறு காணாத இழப்பு! 54,400 வீரர்களை ரஷ்ய மோதலில் பலிகொடுத்த உக்ரைன்
ரஷ்யாவுடனான போரில் ஒக்டோபர் மாதத்தில் 54,400 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவோ அல்லது படுகாயமடைந்ததாகவோ உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் , போர் தொடங்கியதிலிருந்து இதுவே மிக அதிகமான மாதாந்திர எண்ணிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதத்தில் உக்ரேனியப் படைகள் 96.2 சதுர கிலோமீட்டர் (37.1 சதுர மைல்) நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றியதாகவும், இது அதே காலகட்டத்தில் ரஷ்யப் படைகள் கைப்பற்றியதை விட 10.4 சதுர கிலோமீட்டர் அதிகம் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பு
ஒக்டோபர் 21 அன்று ரஷ்யப் படைகள் 2,250 உயிரிழப்புகளைச் சந்தித்ததாகவும், இது தினசரி இழப்புகளில் ஒரு சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதில் ரஷ்யா பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகிறது என்றும் தங்கள் நிலைகளைத் தக்கவைத்துக்கொண்டு, நிலப்பரப்புகளை விடுவித்து, போரின் ஒவ்வொரு நாளையும் ஆக்கிரமிப்பாளருக்கு முடிந்தவரை அதிக இழப்பை ஏற்படுத்துவதாக மாற்றி வருகிறோம் எனவும் கூறியள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |