யாழில் காவல்துறையை கண்டவுடன் கிணற்றுக்குள் வாளை வீசிய இளைஞன் அதிரடி கைது!
Sri Lanka Police
Jaffna
Arrest
By Theepan
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட அனலைதீவு காவல்நிலைய பொறுப்பதிகாரி இராமச்சந்திரன் உத்தியோகத்தர் மயூரன் தலைமையிலான குழு அனலைதீவு ஆறாம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது இரண்டு வாள்களுடன் 20 வயது இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையை கண்டவுடன் ஒரு வாளை கிணற்றுக்குள் வீசியதாகவும் அதனை அந்த இளைஞரை கொண்டு கிணற்றுக்குள் இறக்கி எடுத்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை
சந்தேக நபரை ஊர்காவற்துறை காவல் நிலையத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி