ஹோர்முஸ் நீரிணை திறப்பு : அமெரிக்காவிற்கு நிபந்தனை விதிக்கும் ஈரான்
அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஹோர்முஸ் நீரிணையை இரண்டு நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கத்தார் நாட்டின் தூதரக மத்தியஸ்தர்கள் மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த முடிவை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவப் படைகளைக் குறைத்தல், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளில் இருந்து விலக்கு அளிப்பது, கத்தார் உட்பட வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினாலும், ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை. நிபந்தனைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |