அமெரிக்காவுடனான புதிய போர்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!
அமெரிக்காவுடன் புதிய போர் ஏற்பட்டால் அது முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்க வாய்ப்புள்ளதாக ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளார் முகமது அக்ரமினியா ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய போர் முந்தைய போரை விட நீண்டகாலம் நீடிக்கும். அந்த போர் முடியும் நேரத்தையோ அல்லது நிபந்தனைகளையோ தீர்மானிக்கும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இருக்கமாட்டார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதிலடி
அதேபோன்று, ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் மெஹர்தாத் அக்லாகி பேசுகையில், “ஈரான் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும், அதற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதிலடி வழங்கப்படும். ஈரானுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக செயல்படுபவர்கள், ஈரானின் தற்காப்பு நடவடிக்கையின் தாக்கத்தையோ அதன் விளைவுகளையோ தீர்மானிக்க முடியாது” என எச்சரித்துள்ளார்.

ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளரான ஹுசைன் மொஹேப்பி, நாட்டின் புதிய உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனி அனுப்பிய செய்தியை பிரதிபலிக்கும் விதமாக அரசு தொலைக்காட்சியில் பேசினார். அதில், “அமெரிக்காவுடனான மோதலில் எந்தவொரு புவியியல் வரம்புகளும் எங்களுக்கு இல்லை. எதிரிகளைத் தாக்குவதற்கு ஒரு மிகப்பெரிய களத்தை வரையறுத்துள்ளோம்” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |