தும்பறை சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதி துப்பாக்கிச் சூட்டில் பலி
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
Gun Shooting
By Jaso
பல்லேகல - தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இன்று (1) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
சிறைச்சாலை மதிலை ஒட்டியுள்ள பாதுகாப்பு சாவடிக்கு (Watchtower) ஏறிய குறித்த கைதி, அங்கு கடமையிலிருந்த சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்றுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட காயங்களால் மரணம்
துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, அந்த கைதி பின்னர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் தும்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் என்பதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி