ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்துத் தாம் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.
புளோரிடாவிலுள்ள தனது மார்-ஏ-லாகோ (Mar-a-Lago) ஓய்வு விடுதியில் ஹாலோவீன் ஆடை அலங்கார விருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மத்தியஸ்தர்கள்
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
“இன்றைய ஹாலோவீன் விருந்திற்கு நான் டொனால்ட் ட்ரம்ப் ஆக வேடமிட்டே வந்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவிலான புதிய போர் ஒன்று வெடிப்பதைத் தடுப்பதற்கு சர்வதேச மத்தியஸ்தர்கள் தீவிர தூதரக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிராந்திய அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் நடந்து வரும் அதேவேளையில், ஈரானில் உள்ள ஒன்று அல்லது இரண்டு முக்கிய இராணுவ தளங்களை இன்னமும் அமெரிக்கா கவனிக்க வேண்டியுள்ளது.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையை அவசரமாக முன்னெடுப்பதற்குப் பதிலாக மத்திய கிழக்கின் தற்போதைய கள நிலவரங்கள் மற்றும் ஈரானின் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |