அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Basil Rajapaksa Sri Lanka United States of America Law and Order
By Shalini Balachandran Nov 01, 2026 07:58 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகாமல் சட்டத்தரணி ஊடாகப் முன்னிலையாவதற்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை நீதவான் சதுர திஸாநாயக்க இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பசில் ராஜபக்ச, தாம் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நீண்ட நேர விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியாது என்றும் தெரிவித்து நீதிமன்றத்தில் மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது

குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது

காணொளி தொழில்நுட்பம் 

இதற்கு மாற்றாக காணொளி தொழில்நுட்பம் (Video Technology) ஊடாக சாட்சியமளிக்கத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி கலண கொத்தலாவல இக்கோரிக்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Issues Open Warrant For Basil Rajapaksa

சட்டத்தரணி மூலம் முன்னிலையாவதற்கு அனுமதி கோருவதற்குத் தேவையான விசேட அல்லது விதிவிலக்கான சூழ்நிலை நிலவுவதை உறுதிப்படுத்தும் எந்தவொரு தகுந்த சான்றுகளையும் பிரதிவாதி தரப்பு சமர்ப்பிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இக் கோரிக்கையை நியாயப்படுத்த முன்வைக்கப்பட்ட காரணங்கள் போதுமானதாக இல்லை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்த நீதவான், பசில் ராஜபக்சவின் மனுவை நிராகரித்து திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

சொத்து விபரம் குறித்த முறைப்பாடு: விசாரணை வலயத்தில் சிக்கிய முக்கிய அரசியல் தலைமைகள்

சொத்து விபரம் குறித்த முறைப்பாடு: விசாரணை வலயத்தில் சிக்கிய முக்கிய அரசியல் தலைமைகள்

பெறுமதிமிக்க காணி

மாத்தறை, எளியகந்த பகுதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ் ஹில் (Browns Hill) என்ற பெறுமதிமிக்க காணியை ரூபாய் 50 மில்லியனுக்குக் கொள்வனவு செய்தமை தொடர்பான FCID விசாரணையே இவ்வழக்கின் அடிப்படையாகும்.

அச்சொத்தைக் கொள்வனவு செய்வதற்காகப் பயன்படுத்திய நிதியை ஈட்டிய முறையை வெளிப்படுத்தத் தவறியமையால் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்  கீழ் 4 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Court Issues Open Warrant For Basil Rajapaksa

இதில் முதித ஜயகொடி மற்றும் திஸ்ஸ கலாபதி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.

அத்தோடு தற்போது கனடாவில் வசித்து வரும் அயோமா கலாபதியின் பெயரிலேயே குறித்த சொத்தின் உறுதிப்பத்திரம் பதிவாகியுள்ளது.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் கோரியதையடுத்து, வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியவற்றின் ஊடாக ஏப்ரல் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : 8 பணிகளுக்கு TIN இலக்கம் அவசியம்

இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை : 8 பணிகளுக்கு TIN இலக்கம் அவசியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023