குழந்தையொன்று தாக்கப்பட்ட காணொளி: பெண் ஒருவர் கைது
Sri Lanka Police
Gampaha
Arrest
By Sindu
சமூக ஊடகங்களில் குழந்தையொன்று தாக்கப்படுவதைக் காட்டும் காணொளியொன்று பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று (31) பரவிய இந்தக் காணொளியைத் தொடர்ந்து, எண்டேரமுல்ல காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதே நாளில், காவல்துறை அந்தப் பெண் சந்தேக நபரை கைது செய்து, குழந்தையைப் காவலில் எடுத்துள்ளது.
காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
சந்தேக நபரும் குழந்தையும் பின்னர் கருவாத்தோட்டம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணையில், கூறப்படும் இந்தத் தாக்குதல் ஒக்டோபர் 28ஆம் திகதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கருவாத்தோட்டம் காவல்துறையினமேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி