ஒலி அலைகளால் தீயை அணைக்கும் புதிய கருவி: மெக்சிகோ மாணவியின் சாதனை
தண்ணீர் அல்லது இரசாயனப் பொருட்கள் எதனையும் பயன்படுத்தாமல், ஒலி அலைகளை மட்டுமே கொண்டு தீயை அணைக்கும் புதிய தொழில்நுட்பக் கருவியை உருவாக்கி மெக்சிகோவைச் சேர்ந்த 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோவின் தமோலிபாஸ் மாகாணம், அல்தாமிரா பகுதியைச் சேர்ந்த மேல்நிலைப் பாடசாலை மாணவியான ஏஞ்சலா வெனகாஸ் ஹெர்னாண்டஸ் என்பவரே இந்தப் புதிய தீயணைப்புக் கருவியை உருவாக்கியுள்ளார்.
இவர் வடிவமைத்துள்ள கருவியில் 12 வோல்ட் மின்கலம், அதிர்வெண் உருவாக்கி (Frequency Generator), ஒலிபெருக்கி (Speaker) மற்றும் ஒலி பெருக்கி (Amplifier) உள்ளிட்ட பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சர்வதேச அறிவியல் கண்காட்சி
இதிலுள்ள அதிர்வெண் உருவாக்கி ஒரு வினாடிக்கு 30 டிஜிட்டல் அலைகளை உருவாக்கி, அவற்றை அதிவேக ஒலி அலைகளாக மாற்றிக் குழாய் வழியாக வெளியேற்றுகிறது.

குழாயிலிருந்து வெளிவரும் ஒலி அலைகள் சிறிய சுழல் வளையங்களாக (Vortex Rings) மாறி, தீ எரிவதற்குத் தேவையான ஒட்சிசனின் கிடைப்பைக் குறைப்பதன் மூலம் தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கின்றன.
இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தக் கண்டுபிடிப்புக்கு உயரிய தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மெக்சிகோவில் நடைபெற்ற மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளிலும் குறித்த மாணவி பல விருதுகளை வென்றுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |