நீர் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Government Of Sri Lanka
Water Board
Water
By Sindu
2027 ஜனவரி வரை நீர் கட்டணங்களில் எதுவித மாற்றமும் இருக்காது என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகமவில் இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
2027 ஜனவரியில் மீளாய்வு
நீர் கட்டணத் திருத்தங்கள் ஆண்டுக்கு இரு தடவைகள் மீளாய்வு செய்யப்படுவதாகவும் 2027 ஜனவரியில் அடுத்த மீளாய்வு செய்ய தி்ட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

முன்மொழியப்படும் எந்தவொரு சரிசெய்தலும், நீர் சுத்திகரிப்புச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே அமையும் என்றும், அந்த மாற்றங்கள் ஜனவரி மீளாய்வின்போது மதிப்பிடப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி