ஒன்றரை வயது குழந்தையின் உயிரைப் பறித்த கிணறு: புத்தளத்தில் சம்பவம்
Sri Lanka Police
Puttalam
Death
By Sindu
புத்தளம், உடப்பு, கொத்தாந்தீவு பகுதியில் நேற்று (31) காலை கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
தனது வீட்டின் முன்புள்ள கிணற்றில் விழுந்தே குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையை உடனடியாக கொத்தாந்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்னர்.
பெண் குழந்தை
பெரியபாடு, கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த ஒரு வருடமும் 4 மாதங்களும் ஆன பெண் குழந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

சிறுமியின் உடல் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி