வவுனியா Pizza Hut நிறுவனத்திற்கு ரூ.50,000 அபராதம்
Sri Lanka
Pizza
By Pavi
வவுனியாவில் இயங்கி வரும் Pizza Hut உணவகத்திற்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நிறுவனத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உணவு நிறுவனத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, சுகாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் சுகாதாரமற்ற நிலையிலும் உணவகம் நடத்தப்பட்டமை தொடர்பான குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
வவுனியா நீதவான் நீதிமன்றம்
இதனடிப்படையில் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணையின் முடிவில் 50,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி