பாம்புகள் பழி தீர்க்குமா? : இன்று சர்வதேச பாம்புகள் தினம்
உலக பாம்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16 அன்று கொண்டாடப்படுகிறது. பல்வேறு வகையான பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக பாம்பு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
'ஸ்னேக்' என்ற ஆங்கில வார்த்தை 'ஸ்னகா' என்ற பழைய ஆங்கில வார்த்தையிலிருந்து வந்தது. இந்த ஊர்வன சுமார் 174 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பல்லிகளில் இருந்து உருவானதாக கருதப்படுகிறது.
மனிதர்கள் உருவாவதற்கு முன்பே பாம்புகள் பூமியில் இருந்ததாக நம்பப்படுகிறது. உலக பாம்பு தினம் முதன்முதலில் அமெரிக்காவில் 1967 இல் 'பாம்பு பண்ணை' என்ற அமைப்பால் கொண்டாடப்பட்டது.
பாம்புகள்
உணவுச் சங்கிலிக்கு பாம்புகள் இன்றியமையாதவை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. விவசாய நிலங்களில் எலிகளை கட்டுப்படுத்துகிறது.
உலகளவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. இதில் வெறும் 600 வகை பாம்புகள் மட்டும் நஞ்சுடையது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளன.
பாம்புகள் மனிதர்களுக்கும், விவசாயிகளுக்கும், மருத்துவத் துறையிலும் முக்கிய பங்களித்து வருகின்றன. பாம்புகளை பாதுகாக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் உலக அளவில் பாம்புகளின் எண்ணிக்கை 10% குறைந்துள்ளது. பல பாம்பு இனங்கள் அழியும் நிலையில் உள்ளன.
பாம்பு விஷம் பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவற்றைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

