இளம் புற்றுநோயாளர்களுக்கு புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்த கனடா
கனேடிய (Canada) ஆய்வாளர்கள் இளம் புற்றுநோயாளிகளுக்கு புதிய சிகிச்சை முறையொன்றை கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் (B.C) உள்ள ஆய்வாளர்களே இவ்வாறு புதிய சிகிச்சை முறையொன்றை கண்டறிந்துள்ளனர்.
அதன்படி, வழக்கத்துக்கு மாறான சிகிச்சைகளை கண்டுபிடிக்க உதவும் புதிய முறை ஒன்றையே ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
புதிய சிகிச்சை முறை
இது தொடர்பில் விளக்கிய B.C குழந்தைகள் மருத்துவமனையின் சிறுவர் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வைத்தியர் ஜேம்ஸ் லிம், “இந்த முறையில், நோயாளியின் கட்டிகளை கோழி முட்டைகளில் வளர்த்து, அதிலுள்ள புரதங்களை பகுப்பாய்வு செய்யும் செயல்முறை இடம்பெறுகிறது.
நாங்கள் சிறுவனின் கட்டியிலிருந்து ஒரு சிறிய பகுதியை எடுத்து, உருவாக்கும் கோழி முட்டைகளில் நிலைப்படுத்துகிறோம்.
இது கட்டிக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி, அதை வளர விடுகிறது. அதன் பிறகு, நாம் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி, அதன் எதிர்வினைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
புற்றுநோய்
இந்த முறையின் மூலம் வழக்கமான சிகிச்சை முறைகளால் குணமடையாத நோயாளிகளுக்கு மாறுபட்ட மருந்துகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பும் உருவாகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த ஆய்வில் பங்குபற்றிய வைத்தியர் பிலிப் லாங்கே, “பொதுவாக புற்றுநோய் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துகள் சில நேரங்களில் செயல்படாது.
வழக்கமான சிகிச்சை முறைகள் தோல்வியடைந்தால், இந்த புதிய ஆராய்ச்சி அவர்களுக்கு மாற்று வழியைக் காண உதவலாம்” என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
