ட்ரம்பின் அதிரடி வரி விதிப்பு: எதிர்பாராத அளவில் கனடா கொடுத்த பதிலடி
அமெரிக்க (US) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) அதிரடியான வரி விதிப்புக்களுக்கு கனடா (Canada) பதிலடி கொடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாக கனடா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
ட்ரம்பின் வரி விதிப்பு
அந்தவகையில், அவர் பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்துள்ளார். ஆனால் கனடா மற்றும் மெக்சிகோவிற்கு புதிய வர்த்தக வரிகளைச் சேர்க்கவில்லை.
இருப்பினும், கனடாவின் எஃகு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது 25 சதவீத வரிகளை ட்ரம்ப் விதித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், வாகன உதிரிபாகங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது.
கனேடிய பிரதமரின் நிலைப்பாடு
இது குறித்து கனேடிய பிரதமர் மார்க் கார்னி கூறியதாவது, “அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கு 25% வரி விதிக்கப்படுகிறது.
ட்ரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் உலக வர்த்தகத்திற்கு ஒரு சோகம். தங்கள் சொந்த மக்களுக்கு ஏற்படக்கூடிய சேதத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்க நிர்வாகம் வரி விதிப்பு முடிவை மாற்ற வேண்டும்.
அமெரிக்கா அணுகுமுறையை மாற்ற நீண்ட காலம் ஆகலாம்.”என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ட்ரம்பின் புதிய வரிகள் உலக சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்