”சொந்த நாட்டுக்கு போ..!” மற்றுமொரு நாட்டில் சீக்கியருக்கு எதிராக இனவெறி தாக்குதல்
அவுஸ்திரேலியாவின் தாஸ்மானியாவில் ஹோபர்ட் பகுதியில் உணவு விடுதி ஒன்றை வைத்து நடத்தி வருபவர் ஜர்னைல் சிங் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் 15 ஆண்டுகளாக வசித்து வரும் அவர், 10 ஆண்டுகளாக தாஸ்மானியாவில் உள்ளார்.
இனவெறியை தூண்டும் வகையில் கார் நிறுத்தும் பகுதியில் சுவரின் மீது, இந்தியனே, சொந்த நாட்டுக்கு செல் என்ற வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.
இனவெறி தாக்குதல்
இது பற்றி ஜர்னைல் சிங் கூறும்போது, இதற்கு முன்பு ஒருபோதும் இதுபோன்று எனக்கு நடந்தது இல்லை. கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு முறை இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது.
சொந்த நாட்டுக்கு செல்லும்படியும், காரில் நாயின் கழிவுகளை கொட்டியும் இனவெறி தாக்குதல் தொடருகிறது என கூறியுள்ளார்.
இது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். காணொளி சான்று இல்லாமல், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது என கூறியுள்ளார்.
கனடா சம்பவம்
தொடர்ந்து அவருக்கு, இரு முறை இனவெறி மற்றும் மிரட்டல் கடிதங்களும் வந்துள்ளன. காருக்கு சேதம் ஏற்படும் என்று மிரட்டலும் விடப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்து வருகிறோம் என தாஸ்மானியா காவல் துறை உயரதிகாரி ஜேசன் எல்மர் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், அண்மையில் கனடாவில் சீக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டதுடன் சீக்கியர் மீது இனவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |