கனடாவில் நிரந்தர குடியுரிமை வேண்டுமா...! வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு

Canada Permanent Residents World
By Shalini Balachandran Dec 13, 2025 06:56 PM GMT
Report

ஆறாயிரம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கு விண்ணப்பிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது.

கனடா அரசு, Canadian Experience Class Express Entry திட்டத்தின் கீழ் சமீபத்திய டிரா (Draw No. 384) மூலம் 6,000 வெளிநாட்டு திறமையான தொழிலாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமத்திற்கான விண்ணப்ப அழைப்புகளை (ITA) வழங்கியுள்ளது.

இந்த டிரா டிசம்பர் பத்தாம் திகதி 2025 அன்று இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்து–கம்போடியா மோதல் முடிவு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

தாய்லாந்து–கம்போடியா மோதல் முடிவு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

திறமையான வேலை

இதில், குறைந்தபட்ச CRS (Comprehensive Ranking System) மதிப்பெண் 520 பெற்றவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை 100,000க்கும் மேற்பட்ட ITA-களை கனடா வழங்கியுள்ளது.

கனடாவில் நிரந்தர குடியுரிமை வேண்டுமா...! வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு | Canada Invites Applications Permanent Residency

Canadian Experience Class (CEC) திட்டம், கனடாவில் ஏற்கனவே வேலை அனுபவம் பெற்றுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு வருடம் சம்பளத்துடன் கூடிய திறமையான வேலை அனுபவம் கடந்த மூன்று ஆண்டுகளில் இருக்க வேண்டும்.

அத்தோடு, அந்த வேலை அனுபவம் தற்காலிக குடியிருப்பு அனுமதியுடன் கனடாவில் பெற்றிருக்க வேண்டும்.

அனர்த்த நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பில்லியன் ரூபாய்!

அனர்த்த நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பில்லியன் ரூபாய்!

தன்னார்வ வேலைகள்

தன்னார்வ வேலைகள் (Volunteering) அல்லது சம்பளம் இல்லாத இன்டர்ன்ஷிப் அனுபவங்கள் இதில் கணக்கில் கொள்ளப்படாது.

இந்த ஆண்டு டிசம்பர் பத்தாம் திகதி வரை, 30,850 ITA-கள் கனடாவில் வேலை அனுபவம் கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கனடாவில் நிரந்தர குடியுரிமை வேண்டுமா...! வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு | Canada Invites Applications Permanent Residency

IRCC ஒவ்வொரு இரண்டு வாரங்களிலும் டிரா நடத்தி, அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிரந்தர குடியுரிமை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கின்றது.

இந்த நடவடிக்கை, கனடா தனது திறமையான தொழிலாளர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகின்றது.

குறிப்பாக, மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் திறமையானவர்கள் இந்த திட்டத்தின் மூலம் கனடாவில் நிரந்தரமாக குடியேற வாய்ப்பு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானிய அருங்காட்சியக கொள்ளை: வெளியான சிசிரிவி காணொளிகள்

பிரித்தானிய அருங்காட்சியக கொள்ளை: வெளியான சிசிரிவி காணொளிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026