அவுஸ்திரேலியாவை உலுக்கிய துப்பாக்கி சூடு: கனடிய பிரதமர் கடும் கண்டனம்
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு கனடிய பிரதமர் மார்க் கார்னி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துக்கத்தின் இந்த தருணத்தில் ஆஸ்திரேலிய மக்களுடனும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்துடனும் கனடா உறுதியாக நிற்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
யூத சமூகங்கள்
தீவிரவாதம், வன்முறை, வெறுப்பு மற்றும் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹனுக்கா என்பது இருளுக்கிடையே ஒளியை நினைவூட்டும் பண்டிகை என்றும் மற்றும் யூத சமூகத்தின் உறுதியை நினைவுகூரும் காலம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த உறுதியை பாதுகாத்து யூத சமூகங்கள் பாதுகாப்பாகவும் வளர்ச்சியுடனும் வாழ அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
யூத சமூகத்தின் உறுதி பல நூற்றாண்டுகளாக சோதிக்கப்பட்டு வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துரதிருஷ்டவசமாக, சமீப ஆண்டுகளில் கனடாவிலும் அது தொடர்கின்றது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 12 மணி நேரம் முன்