கனடாவிற்கு குடியேறுபவர்களை தடுத்தால் ஏற்படும் சிக்கல்

Canada World
By Dhilak Jan 11, 2024 02:25 PM GMT
Report

தற்காலிகமாக குடியிருப்பு அனுமதி திட்டங்களின் கீழ் கனடாவுக்கு நுழைவோரை தடுத்தால், இவ்வருடம் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் அதிகரிக்குமென Desjardins என்னும் கனேடிய நிதி அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த அமைப்பின் மூத்த இயக்குநரான ராண்டால் பார்ட்லெட்(Randall Bartlett) நேற்று(10) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் வருகையால் கனடாவின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் உயர்ந்துள்ள நிலையில், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டு வருகிறதாக கூறப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத ரணில்! பிரித்தானிய எம்.பி கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத ரணில்! பிரித்தானிய எம்.பி கண்டனம்

குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 

அதன்படி, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களை (non-permanent resident) பெடரல் அரசு கட்டுப்படுத்தினால், 2024இல் கனடாவின் பொருளாதார மந்தநிலை மேலும் மோசமாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிற்கு குடியேறுபவர்களை தடுத்தால் ஏற்படும் சிக்கல் | Canada Residence Permit Immigrants Economic Crisis

பொருளாதார வளர்ச்சி மெதுவாக இருப்பதால் நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை இயல்பாகவே குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கணிப்புகளின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2024 இல், 0.1 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியிருக்கும் நிலையில், நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை முற்றிலுமாக நிறுத்தும் வகையில் புதிய கொள்கைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தினால், 2024 இல், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 0.7 சதவிகிதமாக சுருங்கக்கூடும்.

பொருளாதார வளர்ச்சி

மேலும், அத்தகைய நடவடிக்கை, நாடு மந்த நிலையிலிருந்து மீண்டெழுவதையும் பாதிக்கும் என்றும், அதன் பின்னரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதற்கு அது வழிவகுக்கும்.

கனடாவிற்கு குடியேறுபவர்களை தடுத்தால் ஏற்படும் சிக்கல் | Canada Residence Permit Immigrants Economic Crisis

அத்துடன், ஆக, கனடா இப்போதை விட, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை இரட்டிப்பாக்கினால், இந்த ஆண்டில், கனடாவின் பொருளாதாரம் ஒரு சதவிகிதம் வளர்ச்சியடையும் என்றும், வரவிருக்கும் ஆண்டுகளில் மிகவும் வலுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்றும் Randall Bartlett கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தொடர்ந்து நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதியை அதிகரித்துக்கொண்டே இருந்தால், அதனால் சில பாதிப்புகளும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை என்றும் அறிக்கையில் கூறப்படுகிறது.

அதாவது, நிரந்தரமற்ற குடியிருப்பாளர்களின் அனுமதிகளை அதிகப்படுத்திக்கொண்டே சென்றால், அது மக்களுக்கு தங்க வீடு கிடைக்கும் நிலைமையை பாதிக்கலாம் என்றும், அதனால் பணவீக்கம் மோசமாகலாம் என்றும், அதனால், கனடா வங்கி தனது வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு உயர்த்தியே வைத்திருக்கும் கட்டாயம் ஏற்படாம் என்றும் கூறுகிறது Randall Bartlett வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்



ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026