இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டு குறித்து ஜெய்சங்கர் பகிரங்கம்
கனடா (Canada) வாக்கு அரசியலுக்காகவே இந்தியாவிற்கு (India) எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் (S.Jaishankar) தெரிவித்துள்ளார்.
சீக்கிய அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் உள்ள குருத்வாராவுக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) குற்றச்சாட்டினார். இதையடுத்து கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
அமெரிக்காவுக்கு ரஷ்யா கொடுத்த பதிலடி...நேட்டோவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டணியால் வலுக்கும் சிக்கல்!
மூவர் கைது
இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கரண் ப்ரார் (Karan Brar-22) கமல்ப்ரீத் சிங் (Kamalpreet Singh-22) மற்றும் கரண்ப்ரீத் சிங் (Karanpreet Singh-28) ஆகிய 3 இந்தியர்களை கனடா நாட்டு காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை (03) கைது செய்தது.
இதேவேளை இவர்களுக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாகவும் அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
எனவே இந்தியா மீதான கனடா அரசின் குற்றச்சாட்டு குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்கையில்
“ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியா மீது கனடா அரசு குற்றம்சாட்டியது. ஆனால் அது தொடர்பாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் வழங்கவில்லை.
கனடாவில் தேர்தல்
உள் அரசியல் காரணமாகவே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டிருப்பார். அவரது கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
கனடாவில் தேர்தல் நெருங்கியுள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்களில் சில பிரிவினர் கனடாவில் தங்களுக்கான வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளனர்.
தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. தவிர சில கட்சிகளும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்களை சார்ந்து இருக்கின்றன.
இந்தச் சூழலில் வாக்கு வங்கியை குறிவைத்தே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியா மீது கனடா குற்றம்சாட்டுகிறது.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |