கனடா பிரஜைக்கு சிறிலங்கா விமான நிலையத்தில் நடந்த அவலம்!
Bandaranaike International Airport
Sri Lanka
Canada
By pavan
கனடாவில் இருந்து இலங்கை சென்ற கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திடீரென மரணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
கட்டார் நாட்டிலிருந்து வருகை தந்த அவர் வருகை முனையப்பகுதியில் மயக்கமுற்று கீழே விழுந்த நிலையில் மரணித்துள்ளார்.
55 வயதுடைய கனடாவை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதோடு, பிட்டகோட்டே பகுதியில் வசிக்கும் உறவினரை பார்வையிடுவதற்காக அவர் வருகை தந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
மரணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்