ராஜபக்சாக்களையடுத்து பிள்ளையான் மீதும் தடை விதிக்குமா கனடா - ஆதாரங்களுடன் தீவிர முன் நகர்வுகள்!
கனேடிய அரசு ராஜபக்ச சகோதரர்கள் மீது விதித்த பயணத்தடையை வரவேற்றுள்ள கனேடிய தமிழ் அமைப்புகள், பிள்ளையான் மீதும் பயணத்தடையை விதிக்கவேண்டும் எனக்கேட்டுக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், சமூகசேவையாளர்கள், அரசியல்பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல பொதுமக்களின் படுகொலைக்குக் காரணமான பிள்ளையான் மீது கடுமையான தடைகளை கனடா விரைவில் அறிவிக்க வேண்டும் என்பதற்கமைய தாம் செயற்படுவதாகவும் கனடிய தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பாவிடமும் வேண்டுகோள்
மேலும் ஐரோப்பிய அவுஸ்திரேலிய அரசுகளிடமும் பிள்ளையான் மீதான பயணத்தடையை மேற்கொள்ளுமாறு கோருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தகவல்களையும் தமது மனுக்களில் இணைப்பதற்காக ஆராய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளையான் குழு
அத்துடன் பிள்ளையானின் சகாக்களின் தகவல்களும் இணைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 29ம் திகதியில் இருந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

