கனடாவுக்கு புலம்பெயரவுள்ளோருக்கான தகவல் - செல்வாக்கு செலுத்தும் முக்கிய விடயம்
கனடா
கனடாவுக்கு புலம்பெயர்வதில் காவல்துறை அனுமதி சான்றிதழ் (Police Clearance Certificate) முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விடயமாகும்.
கனடாவுக்கு புலம்பெயரும் ஒருவரும் 18 வயதுக்கு மேற்பட்ட அவரது குடும்ப உறுப்பினர்களும், தாங்கள் எந்தக் குற்றப்பின்னணியும் கொண்டவர்கள் அல்ல என நிரூபிப்பது அவசியமாகும்.
கனடாவுக்கு புலம்பெயர்பவர்களும், 18 வயதுக்கு மேற்பட்ட அவர்கள் குடும்பத்தினரும், தற்போது வாழும் நாடு மற்றும் இதற்கு முன் எந்தெந்த நாடுகளில் ஆறு மாதங்களுக்கும் அதிகமான காலகட்டத்துக்கு வாழ்ந்தார்களோ அந்த நாடுகளிலிருந்துகாவல்துறை அனுமதி சான்றிதழ் (Police Clearance Certificate) பெறவேண்டும்.
ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழி
இந்த காவல்துறை அனுமதி சான்றிதழ் (Police Clearance Certificate) ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் இல்லாமல் வேறு மொழியில் இருக்கும் பட்சத்தில், அது அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு அந்த மொழிபெயர்க்கப்பட்ட சான்றிதழும் இணைத்து சமர்ப்பிக்கப்படவேண்டும்.
கனடாவுக்கு புலம்பெயர்வோர் அவர்களோ அல்லது அவர்களுடைய குடும்பத்தினரோ குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.