அரசியல் பயணத்திலிருந்து விடைபெறும் கனேடிய அரசியல்வாதி
தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக கனடாவின் முன்னாள் நீதி அமைச்சர் டேவிட் லமாட்டி அறிவித்துள்ளார்.
அவர் அரசியலில் இருந்து விடைபெற்று தனியார் சட்ட நிறுவனமொன்றில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றி
லிபரல் அரசாங்கத்தில் நீதியமைச்சராக கடமையாற்றியிருந்த நிலையில், தற்போது எமார்ட் வெர்டுன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகுவதாக லமாட்டி கூறியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் டேவிட் லமாட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகினார். அதன்பின், 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கத்தில் நீதியமைச்சராகவும் சட்ட மா அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.
அமைச்சரவை மாற்றம்
இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டில் ட்ரூடோவால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது லமாட்டிக்கு, அமைச்சுப் பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |