உயிர் தியாகம் செய்த விமானியின் உடலுக்கு அரசியல் தலைமைகள் அஞ்சலி !
புதிய இணைப்பு
வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி செலுத்தினார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (04.12.2025) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
வென்னப்புவ, லுனுவில பகுதியில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கச் சென்றபோது ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி அதன் தலைமை விமானி உயிரிழந்தார்.
அதன்படி, உயிரிழந்த விமானியின் இறுதிச் சடங்குகள் இன்று (04.12.2025) முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெறவுள்ளன.
ஜனாதிபதி அஞ்சலி
இந்நிலையில், ஜனாதிபதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கும் தனது இரங்கல்களை தெரிவித்துக் கொண்டார்.

இதேவேளை, உயிரிழந்த தலைமைய விமானியின் சேவைகளைப் பாராட்டும் விதமாக, நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் கொழும்பு பல்கலையின் உபவேந்தர் மூலம் நேற்றைய தினம் (03.12.2025) அவர் பெற்ற பட்டச் சான்றிதழ் அவரது பூதவுடலுக்கு சமர்பிக்கப்பட்டது.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாச, முன்னாள் இராணுவப் பிரதானி சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களும் இன்று காலை தலைமை விமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

