ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டார்.
Iran
Death
Ayatollah Ali Khamenei
By Sumithiran
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதேவும்(வயது78)( Mansoureh Khojaste Bagherzadeh) கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது மகள்,மருமகன்,பேரக்குழந்தை ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில் கமேனியின் மனைவி படுகாயமடைந்திருந்தார்.
கோமாவில் இருப்பதாக முன்னர் அறிவிப்பு
பாகர்சாதே கோமாவில் இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டிருந்தன.இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1964 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர்களுக்கு ஆறு குழந்தைகள், நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி