கனேடியர்களின் கடவுச்சீட்டு தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
கனேடியர்கள் (canadians) தங்களது விடுமுறை பயணங்களை திட்டமிடும் முன் கடவுச்சீட்டை புதுப்பிக்குமாறு அந் நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
கனேடியர்கள் விடுமுறை பயணத்திற்கு தயாராகி வரும் நிலையில், இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதாவது,கோடை விடுமுறைக்கு கனேடியர்கள் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்வதை முன்னிட்டு, தங்களின் கடவுச்சீட்டு செல்லுபடியாக உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கடவுச்சீட்டு காலம்
சர்வீஸ் கனடா வெளியிட்ட அறிவிப்பில் (Service Canada) “விடுமுறைகளுக்கு முன் அல்லது பயண நாடுகளின் நுழைவு மற்றும் வெளியேறும் விதிமுறைகளுக்கு ஏற்ப கடவுச்சீட்டு காலத்தை சரிபார்க்க வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாடுகளில் குறைந்தபட்ச செல்லுபடியாகும் காலம் அவசியமாக இருக்கும் என்பதால், கடவுச்சீட்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்வது முக்கியம். கடவுச்சீட்டு முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் பயணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் கடவுச்சீட்டு காலாவதி ஆவதற்கு ஆறு மாதங்கள் முன் புதுப்பிக்க வேண்டும்.
விடுமுறை பயணம்
கடவுச்சீட்டு புதுப்பிக்க, தேவையான படிவங்களை நிரப்பி அருகிலுள்ள Service Canada அலுவலகத்தில் பதிவு நேரம் முடிவு செய்யலாம் அல்லது பதிவு இல்லாமலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் நேரடியாக கடவுச்சீட்டு அலுவலகங்களில் அளிக்கப்படும் போது 10 வேலை நாட்களிலும், சாதாரண சர்வீஸ் கனடா மையங்கள் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பினால் 20 வேலை நாட்களிலும் செயல்படுத்தப்படும்.
இரண்டு வாரத்திற்குள் பயணிக்க திட்டமிட்டால், அவசர சேவைக்காக கடவுச்சீட்டு அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். அங்கு பயண சான்றிதழ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் தேவைப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்கான கடவுச்சீட்டு 120 கனேடிய டொலர் ஆகும், 10 ஆண்டுகளுக்கானது கனேடிய டொலர் ஆகும். “பயணத்துக்கான திட்டம் முன்கூட்டியே செய்யும் போது கடவுச்சீட்டு பெறுவது எளிமையானதாக இருக்கும்” என்று குடிமக்கள் சேவைகள் அமைச்சர் டெர்ரி பீச் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |