அரை சொகுசு பேருந்துகளின் 430 அனுமதிப்பத்திரங்கள் இரத்து - நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை
Supreme Court of Sri Lanka
By Pakirathan
அனைத்து மாகாணத்தின் அரைசொகுசு பேருந்து சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 430 அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில், அனைத்து மாகாணங்களின் தனியார் பேருந்து சங்கமும், அதன் 28 உறுப்பினர்களும் சேர்ந்து தாக்கல் செய்த மனுவானது மேன்முறையீட்டு நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மனுதாரர்கள் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
