கோதுமை மாவுக்கான இறக்குமதி அனுமதி இரத்து - வரி அதிகரிப்பு
கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதி முறை நேற்று நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ருவன்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கோதுமை மாவுக்கான வரி
அதாவது ஒரு கிலோகிராம் கோதுமை மாவிற்கு 16 ரூபாய் முதல் 27 ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் கூடுதல் வரியாக 6 ரூபாய் கோதுமை கர்னல்கள் மீது விதிக்கப்படும்.
இந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும் கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்.
கோதுமை மா மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவதே இந்த நடவடிக்கைகளின் முக்கிய நோக்கமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
