உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்

Sri Lankan Tamils May Day Tamil diaspora Northern Province of Sri Lanka
By Theepachelvan May 01, 2025 08:50 AM GMT
Theepachelvan

Theepachelvan

in கட்டுரை
Report
Courtesy: தீபச்செல்வன்

மனித சமூகம் உழைப்பினால் தான் இன்றைய உலகத்தைப் படைத்திருக்கிறது. இன்றைய வாழ்வின் வேகமும் வாய்ப்புக்களும் வசதிகளும் பன்னெடுங்காலமாக மனிதர்கள் கொடுத்த உழைப்பினால் விளைந்தவை.

ஒரு பிள்ளை நற்பிரஜையாக மண்ணில் தலையெடுக்க வேண்டும் என்ற குடியியல் இலக்கை இன்னொரு விதத்தில் சொல்ல வேண்டுமானால், ஒரு பிள்ளை மிகச் சிறந்த உழைப்பாளியாக இந்த மண்ணில் உருவாகுவதுதான் அவனது வாழ்வை மாத்திரமின்றி அவன் வாழும் உலகின் வாழ்வையும் மேம்படுத்தும்.

அத்துடன் எப்படியாக  உழைப்பது உயர்வைத் தரும் என்பது பற்றி இன்றைய காலத்தில் சிந்திக்கப்படுகிறது.

இன்றைய நாள் மே 01 உலக உழைப்பாளர் தினம். இந்த உலகில் உழைக்கும் மக்கள் யாவரையும் நினைவுகொள்ளவும் போற்றவும் இன்றைய நாள் பரிசளிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் தினம் : ஜனாதிபதியிடமிருந்து பறந்த முக்கிய செய்தி

தொழிலாளர் தினம் : ஜனாதிபதியிடமிருந்து பறந்த முக்கிய செய்தி

மே தினம் என்பது          

இப் பூமியில் எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் ஒரு தினம் இருக்கிறது. உழைப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தினம்தான் உழைப்பாளர் தினம். ஒரு வகையில் உழைப்பாளர்களின் ஆயுதமே இந்தத் தினம் தான்.

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள் | May 1St International Workers Day

அவர்களின் கொண்டாட்டத்திற்குரிய ஒரேயொரு நாள் அதுவே. அவர்கள் தமக்காக தாம் போராடும் நாள். ஆனால் இப்போது இந்த நாள்கூட உழைப்பாளர்களிடமில்லை. இந்த நாள் முதலாளிகளின் வசம் சென்றுவிட்டது. இது முதலாளிகளின் தினமாகிவிட்டது.

அரசியல் தலைவர்கள்தான் இப்போது இந்த நாளின் கதாநாயகர்கள் ஆகிவிட்டனர். உழைப்பாளர்கள் எங்கோ ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டுவிட்டார்கள்.

உண்மையில் உழைப்பாளர்களின் பிரச்சினையை அவர்களின் தளத்திலிருந்து அரசியல் ரீதியான கவனத்தை கோருவதுதான் உழைப்பாளர்களின் போராட்டம் மற்றும் மே தினம். ஆனால் இன்றைக்கு உழைப்பாளர்களின் அமைப்புக்களை அரசியல் கட்சிகள் குத்தகைக்கு எடுத்துவிட்டன.

பல நாடுகளின் உழைப்பாளர்களின் அமைப்புக்கள் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள். பெரும் முதலாளிகள் அரசியல் தலைவர்களாக உருவெடுத்து உழைப்பாளர் அமைப்புக்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.

தமது அரசியல் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர். 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டில் மிகவும் அபாரமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு நாளில் 12 மணித்தியாலங்கள் வேலை நேரமாக செயற்படுத்தப்பட்டு மனித உழைப்பு சுறண்டப்பட்டது. கட்டாய வேலை பெறப்பட்டது. இதற்கு எதிராக உழைப்பாளர்களிடமிருந்து குரல்கள் வலுப்பெற்றன.

மே தினத்தின் வரலாறு

இங்கிலாந்தில் சாசன இயக்கம் உருப்பெற்று 6 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது. முக்கியமாக 10 மணிநேர வேலையை அவர்கள் தமது போராட்டத்தின்போது கோரிக்கையாக முன்வைத்தனர்.

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள் | May 1St International Workers Day

பிரான்சில் 1830களில் 15 மணிநேரம் கட்டாய வேலை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் பிரான்ஸ் நெசவு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். இதனை அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோசத்தை முன்வைத்து 1834இல் அவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

1889 ஜூலை 14இல் சோசலிச தொழைிலாளர்களின் சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் பாரிசில் கூடியது. இதில் 18 நாடுகளைச் சேர்ந்த 400 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரெட்ரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்ட முக்கியமான பலர் அதில் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் சோசலீசத்தின் தந்தை என்றும் உழைப்பாளர்களின் தலைவன் என்றும் போறப்பட்டும் கால்ஸ் மாக்ஸ் 8 மணிநேர வேலையை வலியுறுத்தினார். சிக்காகோ சதியை இந்த மாநாடு வன்மையாக கண்டித்தது.

1890இல் உலக அளவில் தொழிலாளர் இயக்கங்களை ஒன்றிணைத்து நடத்த வேண்டும் என்ற அறைகூவலையும் இந்தக் கூட்டம் விடுத்தது. அந்த அறைகூவலே மே முதல் நாளை உலக உழைப்பாளர் தினமாக - மே தினமாக கொண்டாட வழிவகுத்தது.உலகில்உள்ள அனைவரும் எட்டு மணிநேர வேலையை செய்வதற்கு இந்தப் போராட்டமே காரமாண அமைந்தது.

அதன் பின்னர் உழைப்பாளர்களின் உரிமையை வலியுறுத்தும் அவர்களின் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் நாளாக மே ஒன்று கொண்டாடப்பட்டு வந்தது.

மேதினத்திலும் உழைப்பவர்கள்

ஆனாலும் இன்றும் பல தொழிலாளர்கள் எட்டுக்கு மேற்பட்ட மணிநேரங்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். அதிகாலை ஐந்து மணிக்கு வேலைக்குச் சென்று மாலை ஏழுமணிக்கு வீட்டுக்கு அனுப்பும் ஆடைத்தொழிற்சாலைகள் நமது மண்ணிலேயே உள்ளன.அப்பாவி கூலித்தொழிலாளர்களின் நிலமை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள் | May 1St International Workers Day

அவர்கள் தினக்கூலிக்காக வேலை நேரத்திற்கு அதிகமாக வேலை வாங்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தொழிற்சங்கங்களோ, அமைப்புக்களோ இல்லை. அவர்கள் சமூகத்தில் உதிரிகளாக பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். இன்றைய மே தினத்தில்கூட அவர்கள் எங்கோ கூலிக்கு வேலை செய்தடியிருப்பார்கள்.

இன்றைய மே தினத்தை கொண்டாடும்முதலாளிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சமைத்து உணவுகொடுக்கும் சமையல் தொழிலாளியின் நிலைதான் இன்றைய உதிரி உழைப்பாளர்களின் நிலை. இன்றைக்கு பல்தேசிய கம்பனிகள் உழைப்பாளர்களை கடுமையாக சுறண்டுகிறது. அங்கு பணியாற்றும் உழைப்பாளிகளின் பிரச்சினைகள் குறித்து அவர்கள் வாய் திறக்க முடியாது.

வேலை நேரத்திற்கு அதிகமான வேலை, சுயமரியாதையை பாதிக்கும் அணுகுமுறைகள்என்பவற்றால் உழைப்பாளர்கள் உளமளவில் பெரும் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர். இலங்கையின் தலைநகர் கொழும்பில் இத்தகைய பல்தேசிய கம்பனிகள் தாராளமாய் விளைந்துவிட்டன. அவை வடகிழக்கிலும் பெருகிவிட்டன.

ஒருவரது உழைப்பை முடிந்தவரை சுறண்டிவிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பும் பல்தேசிய கம்பனிகள் தமதுகொள்கையாக வைத்துள்ளன. பின்னர் புதிய ஒருவரை எடுத்து அவரது குருதியை உறிஞ்சும் செயற்பாட்டை ஆரம்பிக்கும்.

பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு

பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு

வடக்கு கிழக்கில் உழைப்பாளர் நெருக்கடி

வடகிழக்கில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். கடற்றொழிலாளர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் தமது கடற்தொழிலை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்களையும் தடைகளையும் ஒடுக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள் | May 1St International Workers Day

பரந்தன் இராசயனத் தொழிற்சாலை, கந்தபுரம் கரும்புத் தொழிற்சாலை என பல தொழிற்சாலைகள் இராணுவத்தின் முகாங்களாக உள்ளன. இதில் தொழில்புரிந்த தொழிலாளர்கள் பல வருடங்களாக தொழிலின்றி தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுதல், இன ஒடுக்குமுறை, இராணுவ ஆக்கிரமிப்பு, இராணுவ ஆதிக்கம், உரிமையற்ற வாழ்வு என்பவற்றால் தொழிலாளர்கள்தான் முன்னரங்கில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அவர்களின் பாதிப்பே தமிழ் சமூகத்தின் பாதிப்பாக அமைகிறது. போருக்குப் பிந்தைய நிலையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குருதியையும் உழைப்பையும் சுறண்டும் நிறுவனங்கள் தமிழர் மண்ணில் கூடாரமிட்டுள்ளன.

லீசிங் முறையில் ஒரு பொருளை கொடுத்துவிட்டு ஒரு லீசிங் கம்பனி உழைப்பாளி ஒருவரை கொல்லுகிற சம்பவங்களும் நடக்கின்றன.

உழைப்பால் உயர்ந்துள்ள ஈழத் தமிழர்

போருக்குப் பின்னர் வடக்கில்தான் நுண்நிதி நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. இவை போரால் பாதிக்கப்பட்ட மக்களின் உழைப்பை - நிதியை வெகுவாக சுறண்டுகின்றன.

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள் | May 1St International Workers Day

இதனால் பல குடும்பங்கள் கண்ணீரில் தள்ளாடுகின்றன. நொந்துபோன, காயப்பட்ட சமூகத்தில் தமது எண்ணங்கள் ஈடேறும் என்று நிதி நிறுவனங்கள் கருதுகின்றன. இவ்வாறு பல வழிகளிலும் உழைப்பு சுறண்டப்படுகிறது.

தொழிலாளர்களின் நிம்மதி பறிக்கப்படுகிறது. உழைத்துழைத்து நிம்மதியின்றி அல்லல்படும் உலகின் அனைத்து தொழிலாளர்களின் பிரச்சினையையும் தீரக்கப்படவேண்டும் அவர்களின் வாழ்வில் உண்மையான விடிவு ஏற்படவேண்டும்.

தமிழர் தேசத்தில் உழைப்பாளர்களின் பொருளாதார உரிமைகளுடன் அரசியல் உரிமையையும் இந்நாள் அவாவி நிற்கிறது. ஒரு தேசமாக நாம் விடுதலை பெறுகின்ற போதுதான் பொருளாதார ரீதியாக நாம் சந்தித்துள்ள இடர்கள் எம்மைவிட்டு அகலும். ஸ்ரீலங்காவின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையிலும் உள்நாட்டில் மாத்திரமின்றி, உலகமெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் உழைப்பால் அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகின்றனர்.

எமக்கான தேசம் மலர்கின்ற போது எம்மை மாத்திரமின்றி ஸ்ரீலங்காவுக்கும் கைகொடுக்கும் வலுவான பொருளாதாரச் சூழல் தளைக்கும். அதற்காகவும் ஒன்றுபட்டு இன்றைய நாளில் அறைகூவல் விடுப்பது நம் அனைவரின் கடமையுமாகும்.

அரச ஊழியர்கள் விசேட விடுமுறை குறித்து வெளியான அறிக்கை

அரச ஊழியர்கள் விசேட விடுமுறை குறித்து வெளியான அறிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Hatton, சிட்னி, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, உடுவில்

21 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025