அரசாங்க நிறுவனமொன்றிற்கு வழங்கப்படவுள்ள கஞ்சா
அரசாங்க நிறுவனமொன்றிற்கு கஞ்சாவை வழங்குவது தொடர்பில் நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இதன்படி சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையில் வழக்குப் பொருட்களாக முன்வைக்கப்படும் தொகையைத் தவிர, ஏனையவற்றை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது தொடர்பிலேயே நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
நீதி அமைச்சர் அரச தலைவர் சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் வழங்க முன்னர் ஒப்படைக்கப்பட்ட தொகை மற்றும் அழிக்கப்பட்ட தொகை குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்த அமைச்சர், கையளிக்கப்படவுள்ள கஞ்சாவின் பாதுகாப்பு மற்றும் ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திற்கு கொண்டு செல்லும் பொறுப்பை காவல்துறையினர் ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

