சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கடலுக்குள் பாய்ந்த கார்!
Sri Lanka Police
Jaffna
Kilinochchi
By Sathangani
யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று (05) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கடலில் இருந்து மீட்பு
விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி