உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அரசாங்கத்திற்கு மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள கோரிக்கை
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் அவ்வப்போது எங்களுக்குத் தெரிவிக்கின்றது.
வெளிப்படையான விசாரணை
அரசு, படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிகிறது.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அவர்கள் எங்களுடன் நடத்திய உரையாடல்களிலிருந்து இது தெளிவாகிறது எனவே, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), பதவியேற்றவுடன், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து அங்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |