குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கு விசாரணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகள் இருவரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மேலதிக சாட்சி விசாரணையை செப்டம்பர் 07 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
2014 ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அந்நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் கார்பட் இடும் பணிகளை மேற்கொள்வதை தனியார் நிறுவனமொன்றிடம் கையளித்தபோது, குறித்த நிறுவனத்திற்கு சாதகமாகச் செயல்பட்டதன் மூலம் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |